வாழ்வில் வெற்றிபெற வழிகள்

 


உங்கள் வாழ்வை நீங்கள் புத்துணர்ச்சியோடு மீண்டும் ஆரம்பிக்க உதவக்கூடிய சில விதிகள் கீழே தரப்படுகின்றன.

 1.நல்ல மனிதர்களோடு உங்கள் நேரத்தை செலவளியுங்கள்

யாரின் மூலம் நீங்கள் அதிகம் சந்தோஷமடைகின்றீர்களோ, யாரை நீங்கள் அதிகம் விரும்புகின்றீர்களோ, யாரை நீங்கள் மதிக்கின்றீர்களோ அவர்களோடு நீங்கள் இணைந்திருங்கள். அவர்கள்தான் சிறந்த வழிமுறைகள் மூலம் நீங்கள் முன்னேற்றமடைய உங்களை ஊக்கப்படுத்துபவர்கள். அவர்கள்தான் வாழ்வின் பெறுமதியையும், நீங்கள் தனியாள் அல்ல என்பதையும் உங்களுக்கு உணரச்செய்பவர்கள். நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகின்றீர்களோ அப்படி உங்களைப்பார்க்க ஆசைப்படுபவர்கள்.

2.பிரச்சினைகளுக்கு தைரியத்துடன் முகம்கொடுங்கள்

பிரச்சினைகளைக்கண்டு விரண்டோடாதீர்கள், உங்களால் முடியுமான அளவு அவைகளை எதிர்த்துப்போராடுங்கள், ஏனெனில் எந்தப்பிரச்சினைகளும் தானாகத்தீராது. அவைகளுக்கு நாம் முகம்கொடுத்தே ஆகவேண்டும், இந்தப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கான வாய்ப்பு சிறியளவில் கிடைத்தாலும் உங்களால் முடியுமான அளவு முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில் இப்படி சிறியளவிலாவது வெற்றியடைவது பிற்காலத்தில் பெரிய பெரிய பிரச்சினைகளைத்தீர்க்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.

3.தன்னம்பிக்கையுடையோராயிருங்கள்

நீங்கள் உண்மையில் தற்போது இருப்பது பற்றியும், எந்த விடயங்களை மாற்ற வேண்டும் என்பது பற்றியும், நீங்கள் சாதிக்க விரும்பும் விடயங்கள் பற்றியும், நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்பது பற்றியும் நீங்கள் தன்னம்பிக்கையோடிருங்கள். உங்கள் மனதில் நீங்கள் யார் என்று கேளுங்கள். அப்படி நீங்கள் செய்யும்போது நீங்கள் தற்போது எங்கிருக்கிறீர்கள் என்பதையும்,  எப்படி இதை அடைந்தீர்கள் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். அப்படி நீங்கள் அறியும்போதே நீங்கள் எதிர்காலத்தில் அடைய விரும்பும் இடத்தையும், அந்தஸ்தையும் வரையறுத்துக்கொள்ள முடியும்.

4.உங்கள் மகிழ்ச்சியை முதன்மைப்படுத்துங்கள்

உங்கள் தேவைகளும் ஆசைகளுமே முக்கியமானவை. நீங்கள் அவற்றை கணக்கெடுக்காது விட்டுவிட்டால் நீங்களே அவற்றை நாசமாக்கிவிடுவீர்கள். உங்கள் தேவைகளோடு சேர்த்து உங்களை சூழ உள்ளோரின் தேவைகளை நிறைவேற்றுவதும் முக்கியமாகும். நீங்கள் உங்கள் தேவைகளை அடைந்து உங்களுக்கு நீங்களே உதவியாக இருக்கும் போதுதான் உங்களால் அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும். 

5.உங்களை நீங்களே உண்மையாக நேசியுங்கள்

நீங்கள் மற்றைாருவரைப்போல இருக்க ஆசைப்படுவது உங்கள் தனித்தன்மையையும், ஆளுமையையும் பாழாக்குவதற்கு காரணமாகிவிடும். எனவே மற்றொருவர் போல இருக்க முயற்சிக்காதீர்கள். உங்களுக்குள் மறைந்திருக்கின்ற உங்கள் உணர்வு, ஆளுமை, பலம், என்பவற்றை உள்ளடக்கிய அந்த தனிப்பட்ட ஆளுமையை பற்றிக்கொள்ளுங்கள்.

 


06. நடைமுறை வாழ்வோடு இணைந்திருங்கள்

தற்போதைய நேரமே உங்களுக்கான கொடை. தற்போது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரமே உங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட நேரம். அதுதான் உங்கள் வாழ்க்கை. எனவே நீங்கள் எதிர்காலத்தில் செய்ய நினைக்கும் விடயங்கள் பற்றி சிந்திப்பதையும், கடந்த காலத்தில் நீங்கள் செய்த அல்லது செய்யாதுவிட்ட விடயங்கள் பற்றி சிந்திப்பதையும் நிறுத்திவிடுங்கள். தற்காலத்தில் வாழவும், வாழ்வை அதன் போக்கில் ஏற்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

07. உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

தோல்விகள் என்பது நீங்கள் வெற்றிபெறவும், முன்னேறவும் உங்கள் காலுக்கடியிலுள்ள கற்களாகும், நீங்கள் எப்போதாவதொரு சந்தர்ப்பத்தில் தோல்வியடையவில்லையானால் கடுமையாக உழைக்க முயற்சிக்க மாட்டீர்கள். இதனால் மேலும் உங்களால் கற்றுக்கொள்ள முடியாமல் போகும். எனவே துணிந்து சென்று தடுமாறி விழுங்கள், பின்னர் எழுந்து மீண்டுமொருமுறை முயற்சியுங்கள். மேலும் கற்றுக்கொள்ளவும், வெற்றிபெறவும் எந்தளவு தூரம் நீங்கள் முயற்சிக்கின்றீர்கள் என உங்களை நீங்களே அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளுங்கள். நீங்கள் அடைகின்ற சாதனைகள், நீங்கள் பெறும் தோல்விகள் என்ற நீண்ட பாதையின் இறுதி முடிவாகும். எனவே நீ௩்கள் பெறப்பயப்படும் ஏதாவதொ௫ தோல்வி ௨௩்களுடைய மகத்தான சாதனைக்கான ஒ௫ திறப்பாகவும் இ௫க்கலாம்.

08.௨௩்களை நீ௩்களே மதியு௩்கள்

௨௩்களோடு நீ௩்கள் எப்படி பேசுகிறீர்களோ அவ்வாறே ௨௩்களுடன் பேசும் ஒ௫ நண்பன் ௨௩்களுக்கு இ௫ந்தால் அவனையே ௨௩்கள் நண்பனாக தொடர்ந்தும் வைத்தி௫ப்பீர்கள். ௨௩்களை நீ௩்கள் எவ்வாறு நடத்துகிறீர்களோ அவ்வாறே மற்றவர்களும் ௨௩்களை நடத்துவார்கள். எனவே முதலில் ௨௩்களை நீ௩்களே வி௫ம்பு௩்கள். இல்லையென்றால் ௨௩்களை வி௫ம்பும் யாரையும் நீ௩்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள்.

09. ௨௩்களிடம் ௨ள்ளதைக்கொண்டு தி௫ப்திப்படு௩்கள்

எ௩்களில் பெ௫ம்பாலானவர்களின் பிரச்சினை நா௩்கள் வாழ்வில் குறிப்பிட்ட ஒ௫ இடத்தை அடையும்போதே மகிழ்ச்சியைப் பெறமுடியும் என எண்ணுவதாகும். அதாவது அடுத்தவர்கள் அடைந்துள்ள இடத்தை அல்லது அந்தஸ்தை அடையும்போதே மகிழ்ச்சி கிடைக்கும் என எண்ணுகிறோம். ௨தாரணமாக ௨௩்கள் முதலாளியைப்போல பெரியதொ௫ நிறுவனத்திற்கு சொந்தக்காரராவது அல்லது ௨௩்கள் நண்பனின் வீட்டைப்போல் பெரியதொ௫ வீட்டைக்கட்டுவது போன்றவையாகும். நா௩்கள் இவ்வாறான ஒரு இடத்திற்கு வ௫வதையே எம் இலக்காகக் கொண்டி௫க்கிறோம், ஆனால் அந்த இடத்திற்கு வந்து விட்டால் வேறொ௫ இலக்கை வைக்கிறோம். இவ்வாறே எம் வாழ்வின் பெ௫ம்பகுதியை புதிய புதிய விடய௩்களை அடைவதை இலக்காகக்கொண்டு ஓடுகிறோம். ஆனால் எம்மிடம் தற்போது இ௫ப்பதைக்கொண்டு இன்பமடைய தவறிவிடுகின்றோம். எனவே ஒவ்வொ௫நாள் காலையிலும் ஒ௫ குறிப்பிட்ட நேரத்தை நீ௩்கள் யார்? ௨௩்களிகளடம் தற்போது என்ன இ௫க்கின்றது? என ௨௩்களை நீ௩்களே மதிப்பிட ஒதுக்கு௩்கள்.

10. ௨௩்கள் மகிழ்ச்சியை நீ௩்களே ௨௫வாக்கு௩்கள்

அடுத்தவர்கள் ௨௩்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள் என்று நீ௩்கள் எண்ணிக்கொண்டி௫ந்தால் அது ஒ௫ போதும் நடைபெறப்போவதில்லை. ௨௩்களுக்கான சந்தோஷம் ஒ௫போதும் கிடைத்துவிடாது. ௨௩்களுக்கான சந்தோஷத்தை ௨௩்களால்தான் ௨௫வாக்கிக்கொள்ள முடியும். மகிழ்ச்சி என்பது ஒ௫ தெரிவாகும். இந்த ௨லகில் அடைந்துகொள்ள வி௫ம்பும் மாற்றம் ௨௩்களிடம்தான் இ௫ககிறது. எனவே தற்போது ௨௩்களோடு ௨ள்ளவர்களோடு நீ௩்கள் மகிழ்ச்சியாக இ௫௩்கள். மகிழ்ச்சி என்பது நீ௩்கள் தீர்மானிக்கும் இடத்திலும், நேரத்திலுமே இ௫க்கிறது. ஆகவே ௨௩்களுக்கு வழ௩்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நீ௩்கள் மகிழ்ச்சியை தேடினீர்களென்றால் நிச்சயம் இறுதியில் அதை அடைந்து கொள்வீர்கள்.

 


11. உங்கள் சிந்தனைகளுக்கும், கனவுகளுக்கும் வாய்ப்பளியுங்கள்

வாழ்வில் எமக்கு ஏராளமான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான வாய்ப்புக்கள் செய்யப்படுகின்றன.  நாம் செய்யும் வேலைகள் நூறுவீதம் வெற்றியாக அமையும் என எம்மால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நாம் கடுமையாக உழைக்கவில்லையானால் எம்மால் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உறுதியாகச்சொல்லமுடியும். எனவே கடுமையாக உழையுங்கள். ஒருபோதும் எதையும் இழக்கமாட்டீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்கும்போது மகிழ்ச்சியையோ அல்லது உங்களுக்கு தேவையானதையோ அல்லது ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டியிருந்தாலோ நிச்சயம் உங்களால் பெறமுடியும்.

12எந்த ஒரு இலக்கையும் அடைய தயாராக இருக்கிறீர்கள் என உங்களை நீங்களே நம்புங்கள்

தயாராக இருந்து அடுத்த இலக்கை அடைவதற்குத்தேவையான அனைத்து விடயங்களும் உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உண்மையான ஆபத்துக்கள் உங்கள் முன்னாலேயே இருக்கின்றன. எனவே உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள், சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள். நிச்சயமாக அவை உங்களுக்கான விருதுகளாகும்.

13. நல்ல விளைவுகளையும், காரணிகளையும் ஏற்படுத்தக்கூடிய தொடர்புகளை ஏற்படுத்துங்கள்

நீங்கள் சுதந்திரமான மனிதர்களோடு ஆசையோடும், விருப்பத்தோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த மனிதர்கள்தான் நீங்கள் தற்போதும், எதிர்காலத்திலும் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அந்த நிலைக்கு உங்களை மாற்றக்கூடியவர்கள். எவரை கண்டு நீங்கள் ஆச்ரியப்படுகின்றீர்களோ அவர்களை நீங்கள் நண்பர்களாக அமைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் செயலாற்றக்கூடியவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பையும், கண்ணியத்தையும் மறைத்துக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால் உங்கள் நல்ல குணத்திலும், முன்னேற்றத்திலும் ஆசையுடையவர்கள். உங்களுடைய செயல்களுக்கு நன்றியோடு இருப்பவர்கள். மனிதர்கள் மேற்கொள்ளும் செயல்களில் அதிகம் விழிப்போடிருங்கள். ஏனெனில் பேசும் வார்த்தைகளை விட செய்யும் செயல்கள் அதிகம் முக்கியமானவை.

14. உங்களுடைய புதிய நண்பர்களுக்கு என சந்தர்ப்பம் வழங்குங்கள்

உங்களுடைய எல்லா நண்பர்களோடும் தொடர்புகளைப்பேண உங்களால் ஒருபோதும் முடியாது. ஏனெனில் மனிதர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். அவர்களது எண்ணங்களும், விருப்பங்களும் வேறுவேறானவை. உங்களது தொடர்புகள் பலவீனமடையும் போது அல்லது சுவாரஷ்யமற்றதாக மாறும்போது புதிய தொடர்புகளையும், உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பலன்களும், நன்மைகளும் குறைந்ததாக மாறிப்போன உங்கள் பழைய உறவுகளை விட்டு நீங்கள் விலகிச்செல்லும்போது புதிய உறவுகள் நிலைத்திருக்கக்கூடியதன் சாத்தியத்தன்மையையும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் விதிகள், பலங்களில் நீங்கள் உறுதியாக இருப்பதோடு புதிய உறவுகள் என்பது இதற்குமுன் எதுவும் தெரியாத புதியதொரு இடம் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

15. உங்களோடு நீங்களே போட்டிபோடுங்கள்

உங்களுக்கு அடுத்தவர்களோடு போட்டிப்போட்டு, அவர்களைப்பற்றி மதிப்பிடவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அடுத்தவர்களோடு போட்டிபோடுவது என்பது நேர வீணடிப்பே தவிர வேறில்லை. நீங்கள் ஒரே ஒரு நபருடனே போட்டிபோடுகின்றீர்கள். அவர் வேறுயாருமல்ல நீங்கள்தான். நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மிகச்சிறந்ததை வெளிக்கொண்டு வருவதற்காக உங்களோடு நீங்களே போட்டிபோடுகின்றீர்கள். உங்களுடைய முன்னைய சாதனைகளை தகர்த்தெரியக்கூடியதாக என்னுடைய செயற்பாடு அமைந்திருக்க வேண்டும் என எண்ணும்படியே எப்பொழுதும் நீங்கள்செயற்படவேண்டும்.


1
6. மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களை பாராட்டுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

அடுத்தவர்களிடம் நீங்கள் விரும்பும் நல்ல விடயங்களை அவதானிப்பதோடு அதை அவர்களுக்கும் தெரிவியுங்கள். உங்களை சூழ உள்ளவர்களின் சாதனைகளையும், அவர்களின் தனித்துவங்களையும் மதிப்பதானது உங்களையும் முன்னேற்றகரமானதும், தனித்துவமானதும், பாதுகாப்பானதுமான பாதையில் செலுத்தும். எனவே அடுத்தவர்களின் வெற்றிகளுக்காகவும், சாதனைகளுக்காகவும் அவர்களை பாராட்டுங்கள். அவர்களின் வெற்றியாலும், சாதனையாலும் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் அவர்களுக்கு நேர்மையான மனதுடன் தெரியப்படுத்துங்கள். காலம் உருண்டோடும்போது விரைவாகவோ அல்லது தாமதித்தோ நீங்கள் யாரை பாராட்டி ஊக்கப்படுத்தினீர்களோ அவர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். நீங்கள் யாரை சந்தோஷப்படுத்துனீர்களோ அவர்கள் உங்களை சந்தோஷப்படுத்துவதோடு உங்கள் வெற்றியாலும், சாதனைகளாலும் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

17. கடினமான சூழ்நிலைகளின்போது நம்பிக்கையூட்டும் விடயங்களில் கவனத்தைச்செலுத்துங்கள்.

நீங்கள் கடினமான சூழலுக்கு முகம் கொடுக்கும் போது, நீங்கள் தோல்வியடைந்துவிட்டதாக உணரும்போது, பலதடவை ஆழ்ந்த மூச்சுக்களை விடுங்கள். அந்த கடினமான சூழ்நிலைகளின் போதும் சிறிய நல்ல விடயங்களையும் தேடுங்கள். நீங்கள் முகம்கொடுக்கும் கடினமான சூழல்களால் உங்கள் பலம் அதிகரிக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் எல்லா நம்பிக்கையான தருணங்களிலும் தொடர்ந்தும் உங்களுக்கு இயலுமானவற்றை அடைவதற்கும் உங்கள் வெற்றியை நம்பியவராகவும் நீங்கள் இருப்பது கட்டாயமாகும்.

மேலும் உங்களிடம் இருப்பவை மீதும், நீங்கள் வைத்திருப்பவை மீதும் உங்கள் கவனத்தைக் குவியுங்கள். உங்களிடம் இல்லாதவை பற்றியும், உங்களுக்கு கிடைக்காதவை பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள்.

18. உங்களையும் அடுத்தவர்களையும் மன்னியுங்கள்.

நாம் அனைவருமே எம்முடைய தவறான தீர்மானங்களாலும், மற்றவர்களாலும் மனக்காயங்களுக்கு உட்பட்டு இருக்கிறோம்.நாம் அடைந்த வேதனை சிறியதாக இருந்த போதிலும் அதன் தாக்கம் எமக்கு நீண்ட காலத்திற்கு இருக்க முடியும். ஏனெனில் நாம் அதை பல தடவைகள் மீட்டி மீட்டிப்பார்த்து அவற்றை உயிர்ப்போடு வைத்துக் கொள்கிறோம். இதனால் அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் அதிகம் கஷ்டப்படுகிறோம்.

என்றாலும் மன்னித்தலே இதற்கான ஒரே தீர்வாகும். மன்னித்தல் என்பது கடந்த காலத்தை அழிப்பதோ அல்லது நடந்தவற்றை மறப்பதோ அல்ல. அதற்கு மாறாக அதனால் ஏற்பட்ட வலி, கவலையிலிருந்து விடுபடுதலும் நடந்தவற்றிலிருந்து படிப்பினையை பெற்றுக் கொள்வதுமாகும். அதன் மூலமே வாழ்வில் அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

19. உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

மனிதர்கள் மீது கரிசனையோடிருங்கள், நீங்கள் சரியான பாதையை அறிந்தவர்களாக இருந்தால் மற்றவர்களுக்கு நேர்வழி காட்டுங்கள்.

எந்த அளவுக்கு அதிகமாக நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவுகிறீர்களோ அந்தளவிற்கு அவர்களும் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். நீங்கள் வெளிக்காட்டுகின்ற அன்பும், மென்மையும் அவற்றையே பதிலாகத் தரும்.

20. உள் மனதின் ஓசையை உற்றுக்கேளுங்கள்.

உங்களுக்கு அதை மேற்கொள்ள முடியுமாக இருந்தால் உங்களுக்கு மிக நெருக்கமானவர்களோடு உங்கள் மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். என்றாலும் உங்கள் மனமானது உங்கள் பகுத்தறிவை பயன்படுத்துவதற்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குங்கள். உங்கள் மனதிற்கு நீங்கள் உண்மையாக இருந்து அதற்கு கூற வேண்டியவற்றை தெளிவாகக்கூறுங்கள். அதன்பின் உங்கள் ஆழ்மனதின் மூலம் உண்மையானது என அறிந்து கொண்டவற்றை செய்யுங்கள்.



 21. உங்களில் காணப்படும் மன அழுத்தம் பற்றி விழிப்போடிருப்பதோடு, மன அமைதிக்கு சற்று நேரம் ஒதுக்குங்கள்.

உங்களது வேகமான செயற்பாட்டை தளர்த்தி சிறிது அமைதி அடையுங்கள், பின்பு ஆழ்ந்து மூச்சு விடுங்கள், உங்கள் சிந்தனையை மீட்டெடுக்கவும், உங்கள் காகிதங்களையும், சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்தி மீட்டெடுக்கவும் வரையறுக்கப்பட்ட ஒரு நேரத்தை உங்கள் மனதுக்கு வழங்குங்கள். இதனால் உங்கள் நோக்கங்கள், இலக்குகள் பற்றியதொரு தெளிவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கடும் வேலைப்பளுவில் இருக்கும்போது நீங்கள் எடுக்கின்ற சற்றுநேர ஓய்வானது உங்கள் சிந்தனையை புத்துணர்ச்சியடையச்செய்வதோடு உங்கள் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இந்த குறுகிய நேர ஓய்வானது உங்களுக்கு உங்கள் ஞானத்தை மீட்டுத்தந்து அது உங்கள் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும். இதனால் உங்கள் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான சரியான பாதையிலேயே நீங்கள் பயணிக்கின்றீர்கள் என்ற உங்கள் உறுதி அதிகரிக்கும். 

22. சிறிய அழகான விடயங்களை ரசியுங்கள்.

திருமணம், பிள்ளைகள், வேலையில் பதவியுயர்வு, கை நிறைய சம்பளம், போன்ற பெரிய மகிழ்ச்சியான விடயங்கள் உங்கள் வாழ்க்கையில் இடம்பெற வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதற்கு பதிலாக உங்கள் நாளாந்த வாழ்வில் இடம்பெறும் சிறிய விடயங்களில் உங்கள் மகிழ்ச்சியை கண்டுகொள்ள முடியும். அந்த சிறிய மகிழ்ச்சியான விடயங்கள் அதிகாலை நேரத்தில் ஒரு கோப்பை தேநீர் அருந்துவதாக இருக்கலாம், வீட்டில் தயாரிக்கப்படும் ருசியானதும், மணமானதுமான உணவுகளை ருசி பார்ப்பதாக இருக்கலாம், அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு விடயத்தை மற்றவருடன் இணைந்து மேற்கொள்வதாக இருக்கலாம். உங்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் இந்த சிறிய மகிழ்ச்சியான விடயங்களில் கவனம் செலுத்துவதானது உங்கள் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றத்திற்கு இட்டுச்செல்லும்.

23. மிகச்சிறிய விடயங்களையும் பூர்த்தியானதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

பூரணத்துவம் என்பது, திறம்படச்செய்தல் என்பதற்கு நேரெதிரானதாகும். தம்மிலும், தம்மைச் சூழ உள்ள இடத்திலும் மிகச்சிறந்த நேர்த்தியை எதிர்பார்ப்பவர்கள் முகம் கொடுக்கும் மிகப்பெரிய சவாலே, விடயங்களை அது உள்ளபடியே ஏற்றுக் கொள்வதாகும். சில வேளைகளில் உலகை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வதே மிகச்சிறந்த வழியாக உள்ளது. உலகை அதன் போக்கிலேயே ஏற்றுக்கொள்ளுதல் எனும்போது உலகில் காணப்படும் தவறுகளையும், பிழைகளையும், அதில் காணப்படும் அறியாமையையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதக்கூடாது. மாறாக உலகில் உள்ள அற்பமான, குறைகள் உடனான விடயங்களையும் பூரணத்துவம் மிக்கதாக ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்பதாகும்.

24. உங்கள் இறுதி இலக்கை அடைந்து கொள்வதற்காக வேண்டி உங்கள் நாளாந்த செயற்பாடுகளை வெற்றிகரமானதாக அமைத்துக்கொள்ளுங்கள்.

ஆயிரம் மைல் நீளம் கொண்ட பயணமானது ஆரம்ப முதலெட்டிலிருந்தே ஆரம்பமாகின்றது. உங்களுடைய கனவு எவ்வளவு பெரியதாக இருந்த போதிலும் நாளாந்த அடிப்படையில் அந்த செயலை சிறிய அடிகளாக எடுத்து மேற்கொள்வதன் மூலம் ஆரம்பியுங்கள். நீங்கள் பெரிதாக முயற்சிக்கும் போதும், உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இருக்கும் போதும் நீங்கள் ஏதாவது ஒன்றை மேற்கொள்ளுங்கள்.

                                                                                                                முற்றும்.





                                  



                                                                             




.

                                                                                    



                                          



                                                                                                                                                                                                                      

                                                                                                    






5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post