DeLaRue Lanka இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிடும் நிறுவனம்



தற்காலத்தில், நாம் பொருட்களை, சேவைகளை பெற்றுக் கொள்ளவும், பல்வேறு கொடுக்கல்-வாங்கல்களை மேற்கொள்ளவும் பணத்தினையே அதிகம் பயன்படுத்துகின்றோம். 

முன்னைய காலங்களில் மக்கள் தம்முடைய அன்றாட தேவைகளை மேற்கொள்வதற்காக தம்மிடமிருந்த மற்றும் தாம் உற்பத்தி செய்த பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டனர். இது "பண்டமாற்றுமுறை" என கூறப்பட்டது.

ஆனால் பண்டமாற்று முறையில் இருந்த பல சிரமங்களின் காரணமாக உப்பு, கடல் சிப்பிகள், வெள்ளி, தங்கம் போன்றவை பரிமாற்ற நோக்கங்களுக்காக காலத்துக்கு காலம் பணமாக பயன்படுத்தப்பட்டன. 

எனறாலும் காலப்போக்கில் கொடுக்கல் வாங்கல்கள் பரந்துபட்டதாகவும், விரிவானதாகவும் மாறி, பணமாக பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதனால்  நாணயத்தாள்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

நாணயத்தாள்கள் கொடுக்கல்-வாங்கல்களுககு இலகுவானதாகவும் நிலம், வீடு, கட்டிடம் போன்ற பௌதிக பொருட்களின் பெறுமதியை அளவிடவும் இலகுவாக அமைந்துள்ளன. 

என்றாலும் ஒரு நாட்டில் நாணயத்தாள்களை பயன்படுத்துவது என்பது முற்றிலுமாக மக்களின் நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது. 

மக்கள் நாணயத்தாள்களை பயன்படுத்துவதில் நம்பிக்கை வைக்கவில்லையானால் எல்லா வகையான பொருளாதார மற்றும் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துவிடும்.

எனவே ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் நாணயத்தாள்கள் அந்த நாட்டின் நம்பிக்கைக்குரிய நிறுவனத்தின் கண்காணிப்பில் அச்சடிக்கப்பட்ட வேண்டும் என்பதோடு அவை உயர் பாதுகாப்புடையதாகவும் தாள்களின் தரம் உயர்தரமானதாகவும் இருப்பதோடு நாட்டிலுள்ள ஏனைய பிரஜைகள் தாம் விரும்பியவாறு அச்சடிக்க முடியாதவாறும் இருக்கவேண்டும்.

அப்படியாயின் இலங்கையில் நாம் பயன்படுத்தும் நாணய தாள்களையும், குற்றிகளையும் யார் அச்சடிப்பது என நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? 




இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணயத் தாள்களை நூற்றுக்கு மேற்பட்ட வருடங்களாக அச்சடித்து கொண்டிருக்கும் "De La Rue Lanka" நிறுவனத்தை பற்றியே இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

1821ஆம் ஆண்டு Thomas De La Rue என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தின் தலைமையகமானது Englandன் Basingstoke நகரிலேயே உள்ளது.

ஆரம்பத்தில் Thomas De La Rue வைக்கோலாலான தொப்பிகளை உற்பத்தி செய்தார். பின்னர் எழுதுவினை பொருட்களையும், Printerகளையும் உற்பத்தி செய்தார்.

1831ஆம் ஆண்டு Playing cards உற்பத்தி செய்வதற்கான காப்புரிமையைப் பெற்றார்.

Playing Cards

1855 முதல் தபால் முத்திரைகள் அச்சிட ஆரம்பித்த நிறுவனம், 1860ஆம் ஆண்டு நாணய தாள்களை அச்சிட ஆரம்பித்து 1896ஆம் ஆண்டு மொரீசியஸ் நாட்டிற்கு முதன்முதலாக நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியது. 

மேலும் அதே ஆண்டு குடும்ப நிறுவனத்தில் இருந்து தனியார் நிறுவனமாக மாறியது.

1921இல் De La Rueன் குடும்பத்தினர் தமது பங்குகளை விற்றனர். 1947ஆம் ஆண்டு இந்நிறுவனம் முதன்முறையாக இலண்டன் பங்குச் சந்தையில் உள்ளடக்கப்பட்டது. 

1958இல் தனது நிறுவனத்தின் பெயரை The De La Rue Company Limited என மாற்றியதோடு 1991இல் De La Rue PLC என மாற்றியது.

இந்நிறுவனம் அதிஉயர் பாதுகாப்பு தன்மையுடைய தாள்கள் மற்றும் உயர்தரமான அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 69 நாடுகளுக்கு நாணயங்களை அச்சிடுகின்றது. 

அதுமட்டுமன்றி வங்கி காசோலைகள் (bank cheqnes), சாரதி அனுமதிப்பத்திரங்கள் (driving License), வரி முத்திரைகள் (tax stamps), உணவு வவுச்சர்கள்(food vouchers), போன்றவற்றையும் கூட பரந்த அளவில் உற்பத்தி செய்கின்றது.

௧டந்த காலங்களில் இந்நிறுவனமானது playing cards, தபால் முத்திரைகள், எழுதுவினைப்பொருட்கள் சில Board gamesகளை உருவாக்கியதோடு அவை காலத்துக்குக் காலம் வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டோ அல்லது நிறுவனம் தயாரிப்பதை நிறுத்தியோ அல்லது அரசாங்கத்தினால் தடை தடைசெய்யப்பட்டோ இல்லாமலாகின.

 DE LA RUE LANKA

1980ம் ஆண்டு பியகமவில் ஆரம்பிக்கப்பட்ட The De La Rue Lanka நிறுவனமானது வருடாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான நாணயத்தாள்களை அச்சிடுவதோடு உலகம் முழுவதும் இலங்கை உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகம் செய்கின்றது. 

செய்தி
2021/06/29

300க்கும் மேற்பட்ட உள்நாட்டு பணியாளர்கள் வேலை செய்வதோடு, இலங்கையில் அமைந்துள்ள இந்நிறுவனமானது De La Rue குழுமத்தின் உலகளாவிய மூன்று முக்கிய பணம் அச்சிடும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இலங்கையில் நூற்றி அறுபது வருடங்களாக செயற்படும் இந்நிறுவனமானது முதலில் 1857ஆம் ஆண்டு தபால் முத்திரைகளை அச்சிட்டு வழங்கியது. 

பின்னர் 1885ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை நாட்டின் தேசிய நாணயங்களை அச்சிட்டு விநியோகிக்கின்றன.



De La Rue நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்காக முதலில் ஆயிரம் ரூபா வரையான பணத்தை வெவ்வேறு பெறுமதியில் அச்சிட்டது. 

குறைந்த பெறுமதியுடைய ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தாள்கள் 1917-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் கீழான முதல் தொடர் பணத்தாள்கள் 1951ஆம் ஆண்டு Bradbury Wilkinson என்ற நிறுவனத்தால் அச்சிடப்பட்டன. 

இந்நிறுவனம் 1970 வரை மற்றொரு புதிய தொடரான நாணய தாள்களை அச்சிட்டது. இந்நிறுவனம் De La Rue நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இரு நிறுவனங்களும் இணைந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் (Fiora and Fauna) படங்கள் உள்ளடங்கிய நாணய தாள்களை அச்சிட்டன. 

அதன்பிறகு வரலாற்றுரீதியான மற்றும் தொல்பொருள் சார்ந்த இடங்களின் படங்கள் உள்ளடங்கிய நாணயத்தாள்களை அச்சிட்டன.

தற்போது வரை இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படும் De La Rue Lanka நிறுவனமானது அதன் பதினோராவது தொடர் நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. 

அவற்றில் இலங்கையின் அழகை பிரதிபலிக்ககூடிய இயற்கை காட்சிகளையும், தொழிற்சாலைகளையும், இலங்கையின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், சாதனைகளையும் பிரதிபலிக்கக் கூடியதான புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளது.

1980ஆம் ஆண்டு De La Rue Lanka நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்நிறுவனமானது அதன் தொழிற்சாலைகளுக்காகவும், அதன் ஊழியர்களுக்காகவும், திறன்களுக்காகவும் பாரியதொரு தொகையினை வருடாந்தம் முதலீடு செய்கின்றது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் இலங்கை அரசாங்கமானது இந்நிறுவனத்தின் 40 வீதமான பங்குகளை தன் வசம் வைத்துள்ளது.

1987ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சுடன் இணைந்த De La Rue Lanka நிறுவனமானது இலங்கையின் உள்நாட்டு முதலீட்டுக்கு மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். 

இந்நிறுவனமானது சம்பளம்,வரிகள் மற்றும் சேவைகள் என்ற அடிப்படையில் வருடாந்தம் 1.9 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வருமானமாக இலங்கை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கின்றது.

De La Rue Lanka நிறுவனத்தின் பரந்துபட்ட விநியோக சங்கிலி தொடரானது அதன் உள்ளக தொழிலாளர் எண்ணிக்கையை விட பத்து மடங்கு பெரியதாகும். 

இந்நிறுவனமானது ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கிக்காக மாத்திரமே நாணயத்தாள்களை அச்சிட்டுக்கொண்டிருந்தது. 

ஆனால் தற்போது இந்நிறுவனம் தனது பியகம தொழிற்சாலையில் தயாரிக்கும் நாணயத்தாள்களில் 80 வீதமானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிறுவனமானது கடந்த சில வருடங்களில் கிட்டத்தட்ட ஏழு பில்லியனுக்கும் அதிகமான தொகையை உலகம் பூராகவுமுள்ள தம்முடைய வாடிக்கையாளர்களான 140க்கும் மேற்பட்ட அரசாங்கங்களுக்கு தேவையான உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலீடு செய்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 10 வருடங்களில் இந் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதோடு De La Rue Lanka நிறுவனத்தின் நவீன பாதுகாப்பை கொண்டதான அச்சடிக்கும் தொழில்நுட்பமானது, ஏனைய உலகளாவிய De La Rue நிறுவனங்களை விட மிகவும் முன்னேற்றகரமானதாகும்.

De La Rue நிறுவனமானது ஆசியாவின் ஏனைய நாடுகளில் தனது கிளைகளை கொண்டிருக்கின்றபோதிலும், De La Rue Lanka நிறுவனமே முழு ஆசியாவிலும் இருக்கின்ற ஒரே ஒரு நாணயத்தாள்கள் அச்சிடும் நிறுவனம் என்பதோடு அதிகூடிய பாதுகாப்பு வசதிகளை கொண்ட நிறுவனமும் ஆகும். 

இந்நிறுவனம் புதிதாக "Single Note Inspection" இயந்திர முறையை அமல்படுத்த உள்ளது. 

இதன்படி அவ்இயந்திரமானது வாடிக்கையாளர் ஒருவர் தனது நோட்டுக்களை பரிசோதித்து தரும்படி வேண்டினால் அவர்களது ஒவ்வொரு நோட்டுகளும் அதிகூடிய நுட்பங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பரிசோதிக்கப்படுவதோடு அவர்கள் பயன்படுத்தும் நாணயத்தாள்கள் ஒவ்வொன்றும் உயர்தரமானவைதானா என உறுதிப்படுத்திக்கொடுக்கும்.


1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post